மருமகள் சமந்தாவிற்கு டஃப் கொடுக்கும் 50 வயதான நடிகை அமலா.. வெறித்தனமான உடற்பயிற்சி!

husband cine telugu
By Jon Jan 23, 2021 11:25 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80, 90களில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை அமலா. மைதிலி என்னை காதலி படத்தில் வாய்ப்பு பெற்றுசினிமாவில் அறிமுகமான அதே வருடத்திலேயே, மெல்ல திறந்த கதவு, பன்னீர் நதிகள், கண்ணே கனியமுதே, உன்னை ஒன்று கேட்பேன், ஒரு இனிய உதயம், ஐந்து படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்தார்.

தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக மாறினார். முன்னணி நடிகையாக இருக்கும்போதே கடந்த 1992 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை காதலித்த இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். தற்போது 53 வயதாகும் அமலா. தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இதனால், கடுமையான உடற்பயிற்சிகளை செய்து தன்னுடைய உடலை வலுப்படுத்தி வருகிறார். இந்நிலையில் மருமகள் நடிகை சமந்தாவிற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு உடற்பயிர்சியின் முக்கியத்துவத்தை கூறும் விதமாக சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் 53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா என்று வாயை பிளந்து வருகிறார்கள்.