நயன்தாரா சமந்தாவை அதற்காக 3 நாட்கள் காக்க வைத்த பிரபல நடிகர்! அதுவும் இந்த நடிகரா?

samantha nayantara vijaysethupathi vigneshshivan
By Edward Aug 16, 2021 02:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாக சூழல் நடந்து வருவதால் பல படங்கள் ஓடிடி இணையத்தளத்தில் வெளியாகி வருவது சோகத்தினை தந்துள்ளது பிரபலங்களுக்கு. அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான சமந்தா, நயன் தாரா இருவரும் இணைந்து நடிகர் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்கள்.

தற்போது விஜய் சேதுபதி10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருவதால், தன் தேதிகளை 5 நாள், 10 நாள் என பிரித்து பிரித்து இயக்குனர்களுக்கு வழங்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் திண்டுக்கல்லில் நடந்த பொன்ராம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது இயக்குனர் பொன்ராமோ கூடுதலாக மூன்று நாட்கள் கொடுத்தால் அங்கு நடக்கும் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடுவேன் எனக் கூறி விட்டாராம்.

எனவே விஜய் சேதுபதியும் சம்மதம் தெரிவித்து நடித்து கொடுத்துள்ளார். ஆனால் அந்த மூன்று நாட்கள் அவர் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டிய நாட்களாம். இந்நிலையில் அந்த படப்பிடிப்புக்காக சென்னை வந்த நயன்தாரா தனது காதலரின் படம் என்பதால், 3 நாட்கள் பொறுமையாக இருந்து நடித்து கொடுத்துள்ளாராம்.