இதுபத்தாது இன்னும் வேண்டும்! விளம்பரத்திலேயே காசு சம்பாதிக்கும் நடிகை சமந்தா!

samantha advertisement tamilactress
By Edward Mar 09, 2022 01:50 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. பாணா காத்தாடி படத்தின் மூலம் ஆரம்பித்த சினிமாத்துறை சமீபத்தில் வெளியான புஷ்பா படம் வரை 12 வது ஆண்டு சினிமா வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்.

பல சர்ச்சைகள் பிரச்சனைகளை சந்தித்து வந்த சமந்தா கணவர் நாக சைதன்யாவை கடந்த ஆண்டு பிரிந்தார். விவாகரத்துக்கு பிறகு காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சமந்தா, பாலிவுட், ஹாலிவுட் அளவிற்கு வாய்ப்புகளை அள்ளி வருகிறார்.

இதற்கிடையில் விளம்பர படங்களிலும் நடித்து அதிலும் சம்பாதித்து வருகிறார். ஒரு படத்திற்கு கோடி அளவில் சம்பளம் வாங்கும் சமந்தா விளம்பரத்தை சமுகவலைத்தளத்தில் பிரமோட் செய்ய அதற்கான சம்பளத்தையும் ஆண்டுக்கு கோடிக்கணக்கில் சம்பளமாக பெற்று வருகிறார். அதற்காக விளம்பரங்களுக்கு க்ளாமரில் தாராளம் காட்டவும் ஆரம்பித்துள்ளார்.