அந்த குத்தாட்டம் போட்டு வாழ்க்கையே போச்சு! புஷ்பா 2விற்கு நோ சொன்ன சமந்தா
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுன் கெட்டப்பில் இருந்து பாடலில் போட்ட ஸ்டேப் வரை அனைத்துமே ட்ரெண்ட் ஆனது.
மேலும் புஷ்பா திரைப்படத்தில் என்னதான் ரஷ்மிகா கதாநாயகியாக இருந்தாலும், ஒரே பாட்டிற்கு நடனமாடி ஒட்டுமொத்த கவனத்தை பெற்றார் சமந்தா. செம வைரலான அப்பாடலுக்கு சமந்தாவிற்கு பெரும் தொகை சம்பளமாக அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது புஷ்பா படத்தை போல அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் சமந்தா நடனமாட முடியாது என்பது போல் தெரிவித்துவிட்டாராம். அவருக்கு பதிலாக புஷ்பா இரண்டாம் பக்கத்தில் பாலிவுட் நடிகை திஷா பாட்னி ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் புஷ்பா படத்திலும் கூட சமந்தாவிற்கு பதிலாக திஷா பாட்னி-யை தான் முதலில் நடனமாட கேட்டதாகவும் கூறப்படுகிறது.