நான் என்ன செகண்ட் ஹேண்ட்-ஆ..விவாகரத்தால் கஷ்டப்பட்டதால் பழிவாங்குறேனா!! நடிகை சமந்தா எமோஷ்னல்..

Samantha Naga Chaitanya Bollywood Indian Actress Divorce
By Edward Nov 27, 2024 06:30 AM GMT
Report

நடிகை சமந்தா

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் பக்கம் சென்று தன்னுடைய மார்க்கெட்டை அதிகரித்தவர் நடிகை சமந்தா. இதற்கிடையில், மயோசிடிஸ் நோயின் தாக்கத்தால் கஷ்டப்பட்டும் வருகிறார் நடிகை சமந்தா. சமீபத்தில் சிடடெல் படத்தின் ரிலீஸிகுக்கு பின் சமந்தா மும்பையில் செட்டிலாகி பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

நான் என்ன செகண்ட் ஹேண்ட்-ஆ..விவாகரத்தால் கஷ்டப்பட்டதால் பழிவாங்குறேனா!! நடிகை சமந்தா எமோஷ்னல்.. | Samantha Opens Up About Fter Divorce Secondhand

செகண்ட் ஹேண்ட்

சமீபத்தில் அளித்த பேட்டியில், எனக்கு விவாகரத்தான சமயத்தில் பலரும் என்னை செகண்ட் ஹேண்ட், வாழ்க்கை வீணாக போய்விட்டது, சமந்தாவை யூஸ் செய்துவிட்டார்கள் என்றெல்லாம் கமெண்ட் செய்தார்கள். அப்போது எல்லாம் எனக்கு கஷ்டமாக இருந்தது. இந்தப்பிரச்சனை என்பது எனக்கு மட்டுமின்றி என் குடும்பத்துக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது.

அந்த சமயத்தில் நான் கொஞ்சம் டவுனாகத்தான் இருந்தேன். அதற்கு என்ன செய்ய முடியும். ஒரு மூலையில் அமர்ந்து அழுது கொண்டா இருக்க முடியும். சரி நடந்தது நடந்துவிட்டது, வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்து வாழ்கிறேன்.

நான் என்ன செகண்ட் ஹேண்ட்-ஆ..விவாகரத்தால் கஷ்டப்பட்டதால் பழிவாங்குறேனா!! நடிகை சமந்தா எமோஷ்னல்.. | Samantha Opens Up About Fter Divorce Secondhand

அதையும் நான் பழிவாங்குவதற்காக வாழ்கிறேன் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது அர்த்தம் இல்லை, நான் என் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன், இவ்வளவு பிரச்சனைக்குப்பின் என்னுடன் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நடிகை சமந்தா எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.