முத்தக்காட்சி சீன்..இதே கேள்விய எத்தனை பேர் கேப்பீங்க!! அசோக் செல்வன்..
அசோக் செல்வன்
இயக்குநர் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகி இன்று வெளியான படம் தான் அன்பில் அவன் படம். இப்படத்தின் ப்ரீமியம் ஷோம் நேற்று காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அசோக் செல்வனிடம், முத்தக் காட்சி குறித்து கேள்வி எழுப்பட்டது.
இதற்கு அசோக் செல்வன், இப்படம் உருவான காலத்தில் இருந்தே கீர்த்தி பாண்டியனுக்கு கதை தெரியும், இதற்காக நாங்கள் எவ்வளவோ உழைத்திருக்கிறோம் என்று அவர்களுக்கு தெரியும். அவரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார்.
அவங்க கலைத்துறையில் இருக்கிற ஒரு கலைஞர் என்பதால் இந்த படத்தை எப்படி பார்க்கணுமோ அப்படி சரியாக பார்த்தார். ஆனால் அந்த முத்தக் காட்சியை பற்றியே ஏன் மூணு பேர் கேட்கிறீங்க?

எனக்கு உண்மையிலேயே புரியல அதைத்தவிர வேறு எதுவும் உங்களுக்கு கேட்கத் தோணலையா? படம் குறித்து ஏதாவது நல்ல கேள்வி இருந்தா கேளுங்க என்று கடுப்பாகி பேசியிருக்கிறார்.