கழுத்தில் தங்க செயின்!! நடிகை சமந்தா புகைப்படத்தை பார்த்து கீர்த்தி சுரேஷ் கொடுத்த ரியாக்ஷன்..
சமந்தா
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் கால் பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் நடிகை சமந்தா, சிடெடல் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு பாலிவுட் பக்கமே இருந்து வந்த நடிகை சமந்தா, சென்னை பக்கம் தற்போது வந்துள்ளார்.
Pickle ball சென்னை அணி
பல தொழில்களில் ஈடுபட்டு வரும் சமந்தா, Pickle ball விளையாட்டில் சென்னை அணியை வாங்கியிருக்கிறார், இந்த விளையாட்டுத் தொடர்பான நிகழ்ச்சிக்காக சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.
ஒரு நடிகையாக இங்கு வராமல், தொழில் முனைவராக சென்னை அணியின் உரிமையாளராக வந்துள்ளேன் என்றும், நான் சென்னை பொண்ணு, சென்னைக்கு வரும் போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாகவும் அவ்வளவு செளரியம் என்று பேசியிருந்தார்.
இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னையில் இருப்பதாக கூறி கழுத்தில் தங்கத்தால் ஆன செயினை போட்டு ஒரு பதிவினை சமந்தா பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த கீர்த்தி சுரேஷ், அட சொல்லவே இல்ல என்ற ரியாக்ஷனை கொடுத்திருக்கிறார்.