வாழ்க்கையை மாற்றியமைத்த.. இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு
சமந்தா
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சமந்தா.
மாடலிங் துறையில் வெறும் ரூ. 500க்கு சம்பளமாக பெற தொடங்கி தற்போது பல கோடி சம்பளம் பெறும் நடிகையாகவும், பலருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் முதலாளியாகவும் உயர்ந்துள்ளார்.
நடிப்பு, தொழில் என பிஸியாக வலம் வந்தவருக்கு பெரிய தடையாக அமைந்தது மயோசிடிஸ் என்ற நோய் பாதிப்பு. தற்போது கொஞ்சம் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு நடிப்பில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு சிட்டாடல் வெப் தொடர் வெளிவந்த ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
இன்ஸ்டா பதிவு
இந்நிலையில், நடிகை சமந்தா அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட போஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த போஸ்டில், 'தடைகளை உடைத்து. தங்களின் வாழ்க்கையவே மாற்றியமைத்து, நினைத்தபடி ஒரு மாஸ்டர் பீசாக உருவாகியுள்ள பெண்கள் தங்கள் கதையை இங்கு சொல்லுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.