வெறும் ரோஜா தான்? நடிகரின் உடம்பில் ஆடையில்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா!

Samantha
By Edward Jul 02, 2022 10:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் ஆரம்பித்து சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வரை நடித்து மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறார்.

பாணா காத்தாடி படத்திற்கு பிறகு, தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வரும் சமந்தா 2017ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்த சமந்தா சர்ச்சை கதபாத்திரங்களில் நடித்தும் குத்தாட்டம் போட்டும் வந்ததால் கணவரின் குடும்பத்தினரை பகைத்துக்கொண்டார்.

அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். தற்போது இருவரும் படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா சுதந்திர பறவையாக விவாகரத்துக்கு பின் மாறினார்.

சமீபத்தில் கூட க்ளாமர் ஆடையணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சமந்தா நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே ஜோடி போட்டு நடித்து வரும் லிகர் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகினாலும் சமீபத்தில் ஆடையின்று ரோஜா பூக்களை கொண்டு மறைத்துள்ள புகைப்படம் வெளியகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன மேடம் இது என்று கலய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Gallery