எல்லை கோடு என்பது இல்லை.. காலப்போக்கில் உணர்ந்த நடிகை சமந்தா

Samantha
By Karthick Raja Jun 17, 2026 04:32 AM GMT
Report

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் 'மா இண்டி பங்காரம்' எனும் திரைப்படம் வரும் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக சமந்தா நடித்துள்ளார்.

இந்த நிலையில், 'மா இண்டி பங்காரம்' திரைப்படத்தின் புரொமோஷன் விழாக்களிலும், பேட்டிகளிலும் தொடர்ந்து நடிகை சமந்தா பங்கேற்று வருகிறார்.

எல்லை கோடு என்பது இல்லை.. காலப்போக்கில் உணர்ந்த நடிகை சமந்தா | Samantha Realized There Is No Boundaries In Cinema

அப்படி ஒரு பேட்டியில் பேசிய அவர், "முன்பெல்லாம் சினிமா ஒரு ஓட்டப்பந்தயம் என்றும் அதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், போட்டியின் இறுதி வரை சென்று வெற்றியடைய வேண்டும் என்றும், நினைத்துக்கொண்டு இருந்தேன்.

காலப்போக்கில் தான் அப்படி ஒரு பந்தயமே இல்லை என்றும், நாம் சென்று பிடிக்க வேண்டிய எல்லை கோடு என்பது இல்லை என்றும் உணர்ந்து கொண்டேன்" என சமந்தா கூறியுள்ளார்.

எல்லை கோடு என்பது இல்லை.. காலப்போக்கில் உணர்ந்த நடிகை சமந்தா | Samantha Realized There Is No Boundaries In Cinema