ஒல்லி பிரபலத்துக்கு சிபாரிசு செய்யும் சமந்தா! அப்படி போகுதா கதை
Samantha
Gossip
By Parthiban.A
நடிகை சமந்தா தனது காதல் கணவரை விவாகரத்து செய்த செய்தியை அறிவித்த பிறகு அதிகம் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். அவர் ஏற்கனவே தனது திருமண சேலையை மாமியார் வீட்டுக்கே திருப்பி அனுப்பிவிட்டு நிலையில் சமீபத்தில் நாக சைதன்யாவை இன்ஸ்டாராமில் பின்தொடர்வதை நிறுத்திவிட்டார்.
இதனால் அவர்கள் ஒன்று சேர்வார்கள் என எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது சமந்தா யசோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் அடுத்து விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
அந்த படத்தில் அனிருத்தை தான் இசையமைப்பாளராக போட வேண்டும் என சமந்தா சிபாரிசு செய்கிறாராம். ஆனால் விஜய் தேவர கொண்டா கோபி சுந்தர் தான் இசையமைக்க வேண்டும் என கேட்கிறாராம்.