பல வருட தோழிக்கே ஆப்பு வைத்த நடிகை சமந்தா.. வருத்தத்தில் பிரபலம்..
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. விவாகரத்துக்கு பின் புஷ்பா படத்தின் ஓ சொல்றியா பாடலால் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வந்தார். இதனையடுத்து யசோதா, குஷி, ஷகுந்தாம் உள்ளிட்ட ஒருசில படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு படம் முதல் இத்தனை ஆண்டுகளாக சமந்தாவிற்கு குரல் கொடுத்து வந்தவர் பின்னணி பாடகி சின்மயி. சமீபத்தில் சின்மயி சர்ச்சையாக பேசி வந்ததால் டப்பிங் யூனியனில் இருந்து விலக்கி வைக்கபப்ட்டார். இதனால் அவரால் டப்பிங் செய்வதிலும் தடை விதிக்கப்பட்டது.
இதனால் சின்மயி சமந்தாவுக்கு வாய்ஸ் கொடுக்கவும் முடியாமல் போனது. சின்மயி மற்றும் சமந்தா இருவரும் 2011 முதலே தோழிகளாக இருந்து நெருக்கமாகவும் இருந்து வந்தனர் இந்நிலையில் இனிமேல் சமந்தாவுக்கு டப்பிங் பேச எனக்கு வாய்ப்பு கிடையாது.
ஏனென்றால் தனது கதாபாத்திரத்திற்கு அவரே குரல் கொடுத்து பேசி வருவதால் இந்த பயணம் முடிவடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டு சில வருடங்களுக்கு முன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் பாடகி சின்மயி.
தெலுங்கு சினிமாவில் ஒருசில இசையமைப்பாளர்கள் பாட அழைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
Samantha has dubbed for herself in Theri something I always wished she’d do. She sounds brilliant :):)
— Chinmayi Sripaada (@Chinmayi) April 8, 2016