அந்த நடிகருடன் நடிக்க சமந்தா வாங்கிய சம்பளம்.. படம் படுதோல்வி

Sivakarthikeyan Samantha
By Kathick Jul 24, 2022 02:36 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக கொண்டாடப்பட்டு வருகிறார் நடிகை சமந்தா. இவர் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் சீமராஜா.

இப்படத்தை பொன்ராம் இயக்கியிருந்தார். ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து இப்படம் தோல்வியை சந்தித்தது. இப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ரூ. 18 கோடி சம்பளம் வாங்கியதாக சமீபத்திய செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்க நடிகை சமந்தா ரூ. 1.5 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது நடிக்கும் படங்களுக்கு ரூ. 3 முதல் ரூ. 4 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம் நடிகை சமந்தா.