அந்த விசயத்தில் யாரிடமும் கெஞ்ச மாட்டேன்!! நடிகை சமந்தா ஒப்பன் டாக்..
பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. சினிமாவில் நுழைந்து தற்போது 13 வருடங்களை கடந்து வரும் சமந்தா, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சில கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்தார்.
இதனை தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு நடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதற்கிடையிலும் படங்களில் நடித்து வந்த சமந்தா, பல சிகிச்சைகளையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் சாகுந்தலம் படத்தில் நடித்திருந்த சமந்தா படத்தின் பிரமோஷன் வேலைகளை பார்த்து வருகிறார்.
அதற்காக பேட்டிக்கொடுத்து வரும் சமந்தா, ஹீரோக்களுக்கு நிகராக நீங்களும் நடிப்பதால் அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் போல் தனக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ஹீரோ மற்றும் ஹீரோயின்களுக்கு சமமான சம்பளம் கிடைக்க போராடுவேன், ஆனால் என்னுடைய கடின உழைப்பை பார்த்து தயாரிப்பாளர்களே முன்வந்து சம்பளத்தை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும்.
ஹீரோவுக்கு நிகரான சம்பளம் கொடுங்கள் என்று யாரிடமும் நன் கெஞ்ச மாட்டேன் என்று சமந்தா கூறியிருக்கிறார். தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன் தாராவுக்கு அடுத்து சமந்தா தான் இருக்கிறார்.
புஷ்பா படத்தின் ஐட்டம் பாடலுக்கு மட்டுமே கிட்டத்தட்ட 5 கோடி சம்பளமாக நடிகை சமந்தா பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.