விவாகரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சமந்தா! இப்படி ஒரு பிரச்சனையா.. என்ன கூறியுள்ளார் பாருங்க

Samantha Tatoo
By Parthiban.A Apr 18, 2022 06:29 PM GMT
Report

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா காதல் பறவைகளாக வலம் வந்து அதன் பிறகு திருமணம் செய்துகொண்டனர். இப்படி ஒரு ஜோடியா என எல்லோரையும் பொறாமைப்பட வைத்த அவர்கள் கடந்த வருடமா திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்து ஷாக் கொடுத்தனர்.

விவாகரத்துக்கு பிறகு சமந்தா சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் கைவசம் நான்கைந்து படங்கள் இருக்கின்றன.

இந்நிலையில் தற்போது சமந்தா இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் கூறி இருக்கிறார். டாட்டூ பற்றி ஒருவர் கேட்க சமந்தா “யாரும் டாட்டூ போடாதீங்க.. Never Ever" என கூறி உள்ளார்.

சமந்தா நாக சைதன்யாவின் பெயரை தனது விலா பகுதியில் டாட்டு போட்டிருக்கிறார். மேலும் முதுகு பகுதியில் YMC என டாட்டு போட்டிருக்கிறார். Ye Maaya Chesave படத்தில் தான் அவர்கள் இருவரும் சந்தித்து காதலிக்க தொடங்கினார்கள் என்பதால் அதன் சுருக்கமான YMC என்பதை அவர் இப்படி டாட்டு போட்டிருக்கிறார்.

தற்போது விவாகரத்து செய்துவிட்ட நிலையில் சமந்தாவுக்கு அந்த டாட்டூக்கள் எல்லாம் நாக சைதன்யாவை தான் நினைவு படுத்துகிறது போல. அதனால் தான் யாரும் டாட்டூ போடாதீங்க என அவர் அட்வைஸ் கூறி இருக்கிறார் போல. 


Gallery