தெலுங்கு சினிமாவில் மோசமான சாதனை படைத்த சமந்தா.. சாகுந்தலம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
Samantha
By Dhiviyarajan
சமந்தா நடிப்பில் உருவான சாகுந்தலம் சமீபத்தில் தான் வெளியானது. இப்படம் வரலாற்று கதையை மையமாக வைத்து எடுத்ததால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் படும் மோசமாக விமர்சனம் கொடுத்தனர்.
இதனால் சமந்தா சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தெலுங்கு சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மோசமான விமர்சனம் கொடுத்ததாலும் வசூல் ரீதியா வெற்றி பெற்று விடும்.
இந்நிலையில் மிக பெரிய பட்ஜெட்டில் உருவான சமந்தாவின் சாகுந்தலம் மாபெரும் தெலுங்கில் மாபெரும் தோல்வி அடைந்துள்ளது. இப்படம் 10 கோடி கூட வசூல் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. இதுவே தெலுங்கு சினிமாவில் மோசமான தோல்வியை தழுவிய படம் என்று சாதனை படைத்துள்ளது.