விவாகரத்துக்கு பின் அந்த விசயத்தை மறக்கவே முடியாது!! உருக்கமாக கூறிய நடிகை சமந்தா..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய சமந்தா, தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.

முன்னணி நடிகையாக திகழ்ந்த சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகர்த்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார் சமந்தா.
அதன்பின் படங்களில் நடிக்க ஆரம்பித்த சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வந்தார். அப்படியிருந்தும் படங்களில் நடித்து வந்த சமந்தா, சாகுந்தலம் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேட்டிக்கொடுத்தும் வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நீங்கள் மறக்கக்கூடாத விசயமாக நினைப்பது என்ன என்ற கேள்விக்கு, நீங்கள் கேட்பது ரிலேஷன்ஷிப் பற்றியா என்று கேட்டுள்ளார்.
எந்த விசயமாகவும் இருக்கலாம் என்ற கேள்விக்கு பதிலளித்த சமந்தா, எந்த விசயத்தையும் நான் மறக்கவிரும்பவில்லை என்றும் எல்லா விசயமும் எனக்கு வாழ்க்கையில் ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளன. அதனால் தான் எதையும் நான் மறக்க மாட்டேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.