2ஆம் திருமணம்.. தாமதமாகவில்லை!! தாயாக ஆசைப்படும் நடிகை சமந்தா..

Samantha Bollywood Indian Actress Tamil Actress Actress
By Edward Nov 13, 2024 04:45 AM GMT
Report

Citadel: Honey Bunny 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ள Citadel: Honey Bunny என்ற வெப் தொடர் கடந்த நவம்பர் 7ஆம் தேதி வெளியாகியுள்ளது.

2ஆம் திருமணம்.. தாமதமாகவில்லை!! தாயாக ஆசைப்படும் நடிகை சமந்தா.. | Samantha Share Her Desire To Become A Mother

Citadel: Honey Bunny அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, சமந்தாவின் நடிப்பும் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது.

அதிலும் இப்படத்தில் பல போல்டான காட்சிகளில் சமந்தா நடித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சண்டைக்காட்சியில் சமந்தா பின்னிபெடல் எடுத்தாலும் சில முத்தக்காட்சியிலும் கிளாமர் காட்சியிலும் சமந்தா நடித்திருந்தார்.

தாயாக ஆசை

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நான் தாய்மை அடைவது மிகவும் தாமதமாகிவிட்டதாக நான் நினைக்கவில்லை. எனக்கு ஒரு தாயாக வேண்டும் என்ற கனவுகள் இன்றும் இருக்கிறது. நிச்சயமாக ஒரு தாயாக இருக்கவே எப்போதும் நான் விரும்புகிறேன்.

2ஆம் திருமணம்.. தாமதமாகவில்லை!! தாயாக ஆசைப்படும் நடிகை சமந்தா.. | Samantha Share Her Desire To Become A Mother

அது ஒரு அழகான அனுபவம், அதைத்தான் நான் எதிர்ப்பார்த்திருக்கிறேன். மக்கள் பெரும்பாலும் என் வயதைப்பற்றி கவலைப்படுகிறார்கள். ஆனால் தாயாக இருக்க முடியாத நேரம் என்று வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்று நான் நினைப்பதாக அந்த பேட்டியில் சமந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் சமந்தாவை வலியுறுத்தி வருகிறார்கள். அதுகுறித்து சமந்தா ட்விட்டர் உரையாடலில், எனக்கு இரண்வாது திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. முதல் திருமணத்தைவிட இரண்டாம் திருமண விவாகரத்துக்கள் தான் அதிகம் என்று புள்ளி விவரம் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.