வீட்டை விட்டு வெளியேறிய சமந்தா! இப்போ இங்கு தான் தங்கி இருக்கிறாரா?

Samantha
By Parthiban.A Mar 17, 2022 03:00 PM GMT
Report

நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்த நாக சைதன்யாவை திடீரென விவகாரத்து செய்தது ஒட்டுமொத்த சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

அதற்கு பிறகு சமந்தா தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நிகழ்ச்சிகளுக்கு கொஞ்சம் ஓவர் கிளாமர் உடன் வரும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகின்றன.

இந்நிலையில் சமந்தா வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் தற்போது நடித்து வரும் யசோதா என்ற படத்தின் ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட செட்டில் தான் அவர் தற்போது தங்கி வருகிறாராம்.

3 கோடி ருபாய் செலவில் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல் செட் போடப்பட்டு இருக்கிறது. அதில் தான் சமந்தா தங்கி இருக்கிறார். ஷூட்டிங் நடப்பதால் அவர் இங்கேயே தூங்கிவிட்டதாக நெருக்கமானவர்கள் கூறி இருக்கின்றனர்.