போகுறபோக்க பாத்தா பாலிவுட் நடிகையையே மிஞ்சிடுவாங்க! சமந்தா அட்ராசிட்டிஸ்..

samantha bollywood taapsee anupamachopra
By Edward Nov 16, 2021 04:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. இதையடுத்து தெலுங்கு படங்களிலேயே கமிட்டாகி நடித்து வந்த சமந்தா நீதானே என்பொன் வசந்தம், ஈ படங்கள் மூல நல்ல வரவேற்பு பெற்றார்.

பின் இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த சமந்தா, விஜய், சூர்யா, விஷால், போன்ற நடிகர்களுடன் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாக தற்போது திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் தி பேமிலி மேன் படத்தால் காதல் கணவரை விவாகரத்து பெற்று பிரிந்தார். பல சர்ச்சைகளுக்கு பிறகு எதையும் கண்டுக்கொள்ளாமல் முன்னேறுவதையே மனதில் வைத்து சகுந்தலம், காத்து வாக்குல ரெண்டு காதல், புஷ்பா படத்தில் பாடலுக்கு குத்தாட்டம் என்று பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் மும்பைக்கு சென்றுள்ள சமந்தா பாலிவுட்டின் பிரபல தொகுப்பாளினி அனுபாமா சோப்ராவின் டாக் சோவில் கலந்து கொண்டுள்ளார். அவருடன்  நடிகை டாப்சி உள்ளிட்ட பால்வுட் பிரபலங்களுடன் கலந்து கொண்டு பேசியுள்ளார். அங்கு ஒயிட் பிளர்ட் ஆடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையான ஆடையணைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery