இதை கூறினால் அனைவரும் என்னை கொன்று விடுவார்கள்.. 51 வயது நடிகர் குறித்து சமந்தா பேசிய விஷயம்..
நடிகை சமந்தாவிற்கு அறிமுகம் தேவையில்லை. இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளாக பெரிய வெற்றி படங்களை கொடுக்கவில்லை.
நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். கண்டிப்பாக விரைவில் மிகப்பெரிய படங்களுடன் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையுலக நட்சத்திரங்கள் அன்ஸீன் வீடியோ அல்லது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும்.
அந்த வகையில் நடிகை சமந்தா பாலிவுட் ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன் குறித்து சமந்தா பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மகேஷ் பாபு பார்க்க குட் லுக்கிங் ஆக இருக்கிறாரா என கேட்டு ரேட்டிங் கொடுக்க சொல்கிறார்கள். அதற்கு நடிகை சமந்தா 10க்கு 10 என்கிற ரேட்டிங் தருகிறார்.
இதன்பின் பாலிவுட் திரையுலகின் முன்னணி ஹீரோவான ஹ்ரித்திக் ரோஷனுக்கு எவ்வளவு ரேட்டிங் தருவீர்கள் என கேட்க, "இதை கூறினால் அனைவரும் என்னை கொன்று விடுவார்கள். எனக்கு ஹ்ரித்திக் ரோஷனின் லுக் பெரிதளவில் பிடிக்காது" என கூறியுள்ளார். மேலும் 10க்கு 7 என ரேட்டிங் கொடுத்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் சமந்தா அளித்த இந்த பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.