6 மாதம் தனிமை வாழ்க்கை!! மயோசிடிஸ்-காக ரிஸ்க் எடுக்கப்போகும் நடிகை சமந்தா
பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. அதன்பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த சமந்தா, சில நடிகர்களுடன் காதல் விசயத்தில் மாட்டினார்.
அதன்பின் நடிகர் நாக சைதன்யாவை 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா கருத்து வேறுபாடு ஏற்பட்டு 4 வருத்திலேயே விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டும் வந்தார்.
அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். இந்நிலையில் கமிட்டாகி நடித்து வரும் குஷி மற்றும் சிடெடல் படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்திருக்கிறார். இதன்பின் மயோசிடிஸ் நோய்க்காக முழு சிகிச்சையை பெறவுள்ளார் சமந்தா.
சமீபத்தில் தனிமை வாழ்க்கை இன்னும் 3 நாட்களில் என்று ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். மேலும் கடந்த 6 மாதங்கள் கடினமானவை என்றும் மிக நீண்ட மற்றும் கடினமான ஆறு மாதங்கள் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது என்று பதிவிட்டிருந்தார்.
அப்படியென்றால் மயோசிடிஸ் நோயால் சிகிச்சை பெற்று வந்த 6 மாதகாலத்திற்கு ஒரு முக்கிய சிகிச்சை சமந்தாவிற்கு இருக்கிறதாம். வரும் ஆகஸ்ட் 20ல் அமெரிக்கா செல்லவுள்ளாராம் சமந்தா.
சமீபத்தில் மும்பை விமானநிலையத்திற்கு சென்றுள்ள சமந்தா இன்னும் சில மாதங்களில் அதற்கான சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து மீண்டு வருவார் என்றும் கூறப்படுகிறது.

