விவாகரத்தான நடிகைக்கு ரூட்டை போட்ட தளபதி? லோகேஷ் இவங்கள எப்படி சமாளிப்பாரு..
தளபதி விஜய் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியாகிய படம் பீஸ்ட். எதிர்ப்பார்த்த அளவிற்கு நெல்சன் இயக்கம் சரியாக வரவில்லை என்று பல விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து விஜய் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் போது தளபதி 67 படத்தினை இயக்குவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக நடிப்பது யார் என்ற கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க கேட்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே சமந்தா விஜய் உடன் தெறி, கத்தி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது நான்காவது முறையாக விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறாராம்.
பல ஆண்டுகள் கழித்து அதுவும் சமந்தாவின் விவாகரத்து ஆன பின் தமிழில் விஜய் படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். சமாந்தா தற்போது விஜய் தேவரகொண்டா படத்திற்காக பிஸியாக இருந்து வருகிறார்.