சிகிச்சை முடிந்து ஒரு மாதம் கூட ஆகல!! மும்பை கேமராமேன்களால் கஷ்டப்பட்ட நடிகை சமந்தா!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா சமீபத்தில் நடித்த சாகுந்தலம் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். கடந்த 2021ல் காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் படங்களில் பிஸியாக நடித்து கொடிக்கட்டி பறந்தார். இதற்கிடையில் கடந்த ஆண்டு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டும் வந்தார். படங்களில் நடித்து வந்த சமந்தா தீவிர சிகிச்சைக்கு பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்.
கூடிய சீக்கிரம் குணமடைவேன் என்று சமந்தா சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது தன் பழைய கிளாமர் லுக்கிற்கு மாறியிருக்கும் சமந்தா கிளாமர் ஆடையணிந்து நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.
அப்போது நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த சமந்தாவை, கேமராமேன்கள் சூழ்ந்துகொண்டனர். அவரை சுற்றி வந்ததோடு அவரது கண்கள் கூசும் படியாக பிளாஷ் லைட்களை அடித்து சமந்தாவை கஷ்டப்படுத்தி இருக்கிறார்கள்.

சமந்தா எவ்வளவோ கூறியும் கேட்காமல் அதையே செய்துள்ளதை பார்த்த நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வருகிறார்கள்.
இப்போது தான் மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு வருகிறார் சமந்தா. பிளாஷ் லைட் அடிப்பதால் சமந்தாவின் உடல்நிலைக்கு கஷ்டத்தை கொடுக்கும் என்பது கூட தெரியாதா என்று நெட்டிசன்கள் திட்டி வருகிறார்கள்.