39 வயதான சமந்தாவுக்கு இருக்கும் மற்றொரு பெயர் என்ன தெரியுமா? பல ஆண்டு ரகசியம் உடைந்தது..

Samantha Tamil Actress Actress
By Jai Apr 29, 2026 03:00 PM GMT
Report

சமந்தா

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோரு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

39 வயதான சமந்தாவுக்கு இருக்கும் மற்றொரு பெயர் என்ன தெரியுமா? பல ஆண்டு ரகசியம் உடைந்தது.. | Samantha Unknown Fact Another Name Friends Call

திருமணத்திற்கு பின்பும் நடித்து வரும் சமந்தா, ஏப்ரல் 28 ஆம் தேதியோடு தன்னுடைய 39வது பிறந்தநாளை கொண்டாடினார். பல பிரபலங்கள் சமந்தாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வந்தனர்.

மற்றொரு பெயர்

இந்நிலையில் சமந்தா, வெறும் நடிகை மட்டுமில்லாமல் தொழிலதிபராகவும் இருக்கிறார். வாசனை திரவிய பிராண்ட் ஒன்றினை சமீபத்தில் ஆரம்பித்து வரும் சமந்தா, ஒரு ரகசியத்தை பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

39 வயதான சமந்தாவுக்கு இருக்கும் மற்றொரு பெயர் என்ன தெரியுமா? பல ஆண்டு ரகசியம் உடைந்தது.. | Samantha Unknown Fact Another Name Friends Call

அதில், எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அந்த பெயர் என் பெற்றோர் எனக்கு வைத்த பெயர் கிடையாது, நானே தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டேன்.

யசோதா என்ற பெயருடன் நெருங்கிய தொடர்பு எனக்கு இருப்பதால் இந்த பெயரை வைத்துதான், என் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ப்ரைவேட்டாக இருக்கும்போது அழைப்பார்கள். இதனால் தான் 2022ல் யசோதா படத்தில் பெயரை அவரே வைத்தாராம்.

இந்த பெயரை கேட்கும் போது கேமராக்களில் இருந்து விலகி தனக்கு வேறொரு தனிப்பட்ட வடிவத்தை இப்பெயர் கொடுப்பதாக சமந்தா தெரிவித்துள்ளார்.