ரியல் புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்திருக்காங்க!! குஷி படத்தால் குஷியான சமந்தா - விஜய்..
கல்யாணம் சம்பந்தமான பல படங்கள் தென்னிந்திய சினிமாவில் வெளியாகி இருக்கிறது. ஆனால் தற்போது நடிகை சமந்தா - விஜய் தேவரகொண்டா நடிப்பில் குஷி படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிவா நிர்வணா இயக்கத்தில் வெளியான குஷி படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
காஷ்மீரில் பேகம் என்ற பெயரில் சமந்தா நடிக்க, ஹீரோவான விஜய் தேவரகொண்டா பேகம் இல்லை பிராமின் பெண் என தெரியவர இரு வீட்டாரும் பேசி திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.
சமந்தாவின் தந்தை இருவரின் ஜாதகம் சரியில்லை என்று திருமணத்திற்கு பிரச்சனை ஏற்படுத்த, பின் காதல் காரணமாக ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் செல்கிறார்கள் சமந்தா, விஜய். அதன்பின் கணவன் மனைவிக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்து லைஃபிலும் கனெக்ட் ஆகும் சம்பவத்தை அப்படியே இயக்குனர் கோர்த்து இயக்கி இருக்கிறார்.
குடும்பத்துடன் பார்த்து படத்தை பாராட்டலாம். அப்படிதான் சமந்தா, விஜய் தேவரகொண்டா நினைத்த படி கம்பேக் ஹிட் கிடைத்த சந்தோஷத்தில் தான் இருவரும் ஜோடியாகவே பிரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரியல் ஜோடியாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
தற்போது படத்தை பற்றி பேசுவதை விட சமந்தா - விஜய் தேவரகொண்டாவின் கெமிஷ்ஸ்டியை பற்றிதான் ரசிகர்கள் கொண்டாடி குஷியாகி வருகிறார்கள்.