விவாகரத்துக்கு பின் இப்படியொரு சந்தோஷம்.. அரிய வகை நோய்க்கு இடையில் நடிகை சமந்தா..

Samantha
By Edward Nov 11, 2022 01:00 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா கடந்த மூன்று மாதகாலமாக அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருவதாக கூறியிருந்தார். கூடிய சீக்கிரம் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

விவாகரத்துக்கு பின் மாடலிங்கு பல படங்களில் நடித்து வரும் சமந்தா நடிப்பில் யசோதா படம் நாளை வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகவிருக்கும் யசோதா படம் ரிலீசாவதுற்கு முன்பே பல கோடிகளை வசூல் செய்துள்ளது.

அதாவது 53 கோடிகள் வரை பிசினஸ் செய்திருக்கிறது. படத்தின் டிஜிட்டல் உரிமை 24 கோடியும், சாட்டிலைட் உரிமை 13 கோடியும், இந்தி ரைட்ஸ் 3.5 கோடி, தியேட்டர் உரிமை 10 கோடி என 53 கோடி வரை பிசினஸ் செய்திருக்கிறது.

கதாநாயகியை மையப்படுத்தி வெளியாகவுள்ள யசோதா படத்தில் 5 கோடி வரை சமந்தா சம்பளமாக பெறவுள்ளார்.

இந்நிலையில் இன்று இப்படம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. விவாகரத்துக்கு பின்னும் அரியவகை நோய்க்கு பின்னும் நடிகை சமந்தா சந்தோஷமாக இருக்கீங்க என்று அவரின் பதிவில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGallery