43 வயதில் ஆளே மாறிப்போன நடிகை சமீரா ரெட்டி.. சுக்குநூறாய் உடைந்துபோன 90ஸ் கிட்ஸ் இதயம்

Sameera Reddy
By Kathick May 20, 2022 11:10 AM GMT
Report

கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இதற்குமுன் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீரா ரெட்டிக்கு அக்ஷய் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர்.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு, சினிமாவில் இருந்து விலகி இருக்கும் சமீரா ரெட்டி அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் பக்கம் தலைகாட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள புகைப்படம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், படங்களில் மிகவும் ஸ்லிம்மாக நாம் பார்த்த நடிகை சமீரா ரெட்டி, தற்போது இரு குழந்தைகளுக்கு தாயான பின், மிகவும் குண்டாகி ஆள மாறிவிட்டார். இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.