கைது செய்யப்பட்ட பிக் பாஸ் தர்ஷன்.. சந்தோஷமாக உள்ளது என வீடியோ வெளியிட்ட சனம் ஷெட்டி
கார் பார்க்கிங் பிரச்சனையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன், மற்றும் நீதிபதியின் மகன் இடையே கைகலப்பு ஏற்ப்பட்டதாகவும், இரு தரப்பினரும் பொலிஸில் புகார் அளித்ததாகவும் தகவல் வெளிவந்தது.
ஆனால், இதில் தர்ஷனை மட்டுமே தற்போது போலீஸ் கைது செய்துள்ளனர். நீதிபதியின் மகன் மற்றும் அவர் குடும்பம் மீது எந்த நடவடிக்கையும் போலீஸ் எடுக்கவில்லை இந்த நிலையில், இந்த பிரச்சனையில் தர்ஷன் கைதாகி இருப்பது குறித்து சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் "தர்ஷன் கைது என செய்தி கேட்டதும் எனக்கு ஒரு நொடி சந்தோசமாக இருந்தது. ஆனால் தர்ஷன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என யோசித்தேன். விசாரணை கூட நடத்தாமல் ஒரு தரப்பு மீது மட்டும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் வெள்ளிக்கிழமை கைது செய்திருக்கிறார்கள்.
விசாரணையே திங்கள் அன்று தான் நடக்கும். மருத்துவமனையில் இருந்து பேட்டி கொடுத்த நீதிபதி மகன் சொல்வது தான் உண்மை என்றால், சிசிடிவி காட்சியை வெளியிட்டு இருக்கலாமே. தப்பு பண்ணாதவங்க தண்டனை அனுபவித்தால் அது மிகப்பெரிய குற்றம்" என சனம் ஷெட்டி பேசியுள்ளார்.
பல வருடங்களுக்கு முன் பிக் பாஸ் தர்ஷன் மற்றும் சனம் செட்டி இடையே நடந்த பிரச்சனை அனைவருக்கும் தெரியும். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், பிக் பாஸ் செல்லும் வாய்ப்பை தர்ஷனுக்கு சனம் ஷெட்டி பெற்று தந்தாராம்.
ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின் தர்ஷன், சனம் ஷெட்டியை திருமணம் செய்ய மறுத்ததாக பொலிஸில் புகார் அளித்தது பெரும் சர்ச்சையாக அந்த நேரத்தில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.