இவருக்கு ஓட்டுபோடாதீங்க! படுகேவளமாக ரசிகரை திட்டிய சேண்டியின் முன்னாள் மனைவி!
தமிழகம் முழுவது வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தலுக்காக காத்திருந்து வருகிறார். தற்போது அனைத்து கட்சிகளும் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தற்போது இணைய தளத்திலும் சூடுபிடித்து விவாதம் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
இந்நிலையில், சினிமாவில் வளர்ந்து வரும் நடன இயக்குனராக இருக்கும் சாண்டி, காஜல் பசுபதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். தற்போது சாண்டி வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாண்டின் இரண்டாவது மனைவியை விட காஜல் அளவுக்கதிகமாக அவரைக் கொஞ்சி பதிவுகள் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதுமே சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்துக்களை ஏற்படுத்துபவராக இருப்பவர் காஜல். அந்த வகையில் தற்போது அரசியல் களம் சூடு பிடித்துள்ளதால் காஜல் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பிஜேபிக்கு ஓட்டுப் போடக் கூடாது எனும் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
ஏன் அப்படி சொல்கிறீர்கள்? என்று ரசிகர் ஒருவர் எடக்கு முடக்காக கேட்டதற்கு போடா...... என்ற படு கேவலமான வார்த்தையை சொல்லி திட்டியுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக பிரபலங்களும் ரசிகர்கள் ரேஞ்சுக்கு இறங்கி சமூக வலைதளங்களில் சண்டை போட்டு வருகின்றனர்.