ஏப்ரல் 20 விவாகரத்து விசாரணை!! 21-ல் விஜய்க்கு எதிராக சங்கீதா செய்யப்போகும் அதிரடி செயல்?
விஜய் - சங்கீதா
விஜய்யை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்த சங்கீதா, திருமண வாழ்க்கையில் இருந்து விலக முடிவெடுத்து விவாகரத்து மனுவை கொடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.

தன் கணவர் விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி விவாகரத்து வழக்கை போட்ட சங்கீதா, விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மனைவி இப்படியொரு குற்ற்ச்சாட்டை வைத்த அடுத்த சில நாட்களிலேயே திரிஷாவுடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சிக்கு செனாறு ஷாக் கொடுத்தார் விஜய்.
ஏப்ரல் 21
இந்த விவகாரம் குறித்து பல பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில், இந்த விவாகரத்து வழக்கானது வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

அன்றைய தினம் விஜய் நேரில் ஆஜராவாரா? இல்லை வீடியோ காலில் ஆஜராவாரா? என்பது தெரியவில்லை. இந்நிலையில், சங்கீதா பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது சங்கீதா, 20 ஆம் தேதி விசாரணையை முடித்துவிட்டு 21 ஆம் தேதி பத்திரிக்கையாளர்களை சந்திக்கவுள்ளதாகவும், அப்போது விஜய்க்கு எதிரான ஆதாரங்களை காட்டுவார் என்றும் பனையூருக்கும், நீலாங்கரைக்கும் நெருக்கமான வட்டாரங்கள் கூறுகிறார்கள். 23 ஆம் தேதி தேர்தல் நடப்பதால் அதற்கு முன் விஜய் பற்றி மேலும் ஒரு குண்டை தூக்கிப்போடுவாரா சங்கீதா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.