உன் முகத்தை கூட பார்க்க முடியாது!! சானியாவின் முன்னாள் கணவர் - 3வது மனைவியுடன் டைவர்ஸ்?
சோயப் மாலிக்
இந்திய டென்னிஸ் உலகின் நட்சத்திர வீராங்கனையாக திகழ்ந்து வரும் சானியா மிர்சாவின் முன்னாள் கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான சோயப் மாலிக், மீண்டும் ஒருமுறை தனது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக டாப் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
ஒரு மகன் இருக்கும் நிலையில் சானியா மிர்சாவுடன் வாழ்ந்த 14 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தார் சோயிப் மாலிக். அதன்பின் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை 3வது திருமணம் செய்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர், தற்போது சனாவையும் விவாகரத்து செய்யப்போவதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் பரவியுள்ளது.
3வது மனைவியுடன் டைவர்ஸ்
திருமணமான ஒரு ஆண்டு மட்டுமே ஆனநிலையில், இந்த தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது.
அந்த வீடியோவில் சோயப் மாலிக் ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃபில் கையெழுத்து போட்டுக்கொண்டிருக்கும் போது அவருக்கு அருகிலேயே நின்ற சனா ஜாவேத், தனது கணவரை பார்க்காமல் முகத்தை திரும்பிக்கொண்டு நிற்கிறார்.
சோயிப் மாலிக்கும் தன் மனைவியுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாதது போல் அவரை தவிர்ப்பது போல் நடந்து கொண்டிருக்கிறார். இதை வைத்து தான் இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் பிரியவுள்ளார்கள் என்ற செய்திகள் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.