எந்த நல்லதும் என் வாழ்க்கையில நடக்கல..இப்பவும் வலிக்குது!! சஞ்சீவ் மனைவி எமோஷனல்...

Tamil Actors Tamil Actress Sanjeev Venkat Preethi Sanjeev
By Jai Jun 14, 2026 05:48 AM GMT
Report

ப்ரீத்தி - சஞ்சீவ்

தமிழ் சின்னத்திரையில் நட்சத்திர தம்பதியினரான ப்ரீத்தி மற்றும் நடிகர் சஞ்சீவ் அளித்த பேட்டியொன்றில் தங்கள் வாழ்க்கை குறித்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

எந்த நல்லதும் என் வாழ்க்கையில நடக்கல..இப்பவும் வலிக்குது!! சஞ்சீவ் மனைவி எமோஷனல்... | Sanjeev And Wife Preethi Emotional Interview

அதில் திருமணத்திற்கு பின் ஒரு பெண் தாய்மை அடையும்போது, அவளுக்கு பல சுபகாரியங்களை செய்து குடும்பத்தினர் கொண்டாடுவது வழக்கமான ஒன்று.

ஆனால், எனக்கு கர்ப்ப காலத்திலும் நடக்க வேண்டிய எந்த ஒரு நல்ல விஷயமும் என் வாழ்க்கையில் நடக்கவே இல்லை. எனக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள், ஆனால் இரண்டு பிரசவத்தின்போதும் எனக்கு வளைகாப்பு நடக்கவே இல்லை, சீமந்தம் நடக்கவில்லை.

எந்த நல்லதும் என் வாழ்க்கையில நடக்கல..இப்பவும் வலிக்குது!! சஞ்சீவ் மனைவி எமோஷனல்... | Sanjeev And Wife Preethi Emotional Interview

ஒரு பெண்ணாக அந்த அழகான தருணங்களை என்னால் அனுபவிக்க முடியாமல் போனது எனக்குள் ஆராத வருவாக இருக்கிறது. அந்த சமயத்தில் எனக்கு பக்கபலமாக இருக்க வேண்டிய அம்மா, அப்பா என்னுடன் இல்லை. என் கணவர் சஞ்சீவ் ஷூட்டிங், வேலை என்று பிஸியாக இருந்ததால் அவராலும் என்னுடன் இருக்க முடியவில்லை.

இப்பவும் வலிக்குது

ஒட்டுமொத்தமான நான் அந்நேரத்தில் தனிமையில் தான் இருந்தேன். மனசு தாங்க முடியாதளவிற்கு கஷ்டம் வரும் போதெல்லாம், யாரிடமும் பேச முடியாமல், என் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்த குழந்தைகளிடம் தான் என் கஷ்டங்களை அதிகம் சொல்லுவேன்.

எந்த நல்லதும் என் வாழ்க்கையில நடக்கல..இப்பவும் வலிக்குது!! சஞ்சீவ் மனைவி எமோஷனல்... | Sanjeev And Wife Preethi Emotional Interview

அந்த வலி, ஏமாற்றம் எல்லாமே என் மனசுக்குள்ள இன்றும் அப்படியே புதைந்து கிடைக்கிறது. நான் உள்ளுக்குள் எவ்வளவு உடைந்து போய் இருக்கேன் என்பதைக்கூட நான் யாரிடமும் சொல்லியது இல்லை.

ப்ரீத்தி கண்ணீருடன் கூறியபோது அருகில் இருந்த கணவர் சஞ்சீவ் உணர்ச்சிவசப்பட்டு மனைவியை கட்டியணைத்து ஆறுதல்படுத்தினார்.