வாய்ப்பில்லாமல் இவருக்கே இந்த நிலையா? விரக்தியில் பிளேபாயிடமே சிக்கவும் ரெடியான சந்தானம்..

Arya Santhanam
By Edward Aug 26, 2022 06:54 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி 90ஸ் கிட்ஸ்களின் கனவு நிகழ்ச்சியாக இருந்து வந்தது லொள்ளு சபா. இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் காமெடி நடிகர் சந்தானம். லொள்ளு சபாவில் கிடைத்த வரவேற்பு அடுத்து சிறுசிறு ரோலில் சினிமா வாய்ப்பு கிடைத்து காமெடி நடிகராகினார்.

அதன்பின் பல படிகள் ஏறி முன்னணி காமெடி நடிகராக வடிவேலு, விவேக்கிற்கு அடுத்த இடத்தினை பிடித்து வந்தார். அவருடன் நடித்த முன்னணி நடிகர்கள் இவர் போட்டோல் ஓகே என்று கூறும் அளவிற்கு முன்னேறி பல லட்ச சம்பளமாக ஒரு நாளைக்கு வாங்கி வந்தார்.

இதனைதொடர்ந்து ஹீரோ ஆசை அவர் மனதில் வளர்ந்து பல படங்களில் கதாநாயகன் அவதாரம் எடுத்தார். குறிப்பிட்ட படம் மட்டுமே வெற்றியை கண்டது. சமீபத்தில் வெளியாகிய படம் படுதோல்வி அடைந்தது. இதனால் வீட்டில் வெட்டியாக இருக்கிறேன் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என்று மேடையில் கூறியுள்ளார் சந்தானம்.

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகிய கேப்டன் படத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சந்தானம். அப்போது மேடையில் பேசிய போது, ஆர்யா எனக்கு கால் செய்தார் என்ன பிஸியான்னு. இல்லை வாய்ப்பில்லாம் சும்மா விட்லதான் வெட்டியா இருக்க என்று கூறினேன்.

அதற்கு அவர் கேப்டன் பட நிகழ்ச்சி இங்க வந்து வெட்டியா இரு என்று கூப்பிட்டு காமெடியாக பேசினார். மேலும், பாஸ் என்கிற பாஸ்கரன் படம் 2 எடுத்தால் அதில் காமெடி ரோலில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அப்படி காமெடி ரோலில் சந்தானம் நடிக்க ஆரம்பித்தால் ஒட்டுமொத்த கோலிவுட் நாயகன்களே அவரில்லாமல் நடிக்க மாட்டேன் என்று கூறுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.