சிவகார்த்திகேயனுடன் போட்டி!! சந்தானத்திற்கு இது தேவையா.. பிரபலம் உடைத்த உண்மை
சந்தானம்
சின்னத்திரையில் களமிறங்கி சாதிக்க துடிக்கும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் நடிகர் சந்தானம்.
விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா மூலம் அதிகம் பிரபலமான இவர் அப்படியே வெள்ளித்திரைக்கு வந்து தனது காமெடி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
காமெடியன் டிராக்கில் இருந்து இப்போது ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார். ஆனால் ஹீரோவாக அவர் எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை.
காமெடி கதாபாத்திரத்தில் கடைசியாக 12 ஆண்டுகளுக்கு முன் இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த மதகஜராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
உண்மை
இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் சந்தானம் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " சிவகார்த்திகேயனும், சந்தானமும் விஜய் டிவியிலிருந்து வந்தவர்கள். ஆனால், சிவகார்த்திகேயன் போன்று சந்தானம் சினிமாவில் வளர வேண்டும் என்று நினைத்தது தான் அவருடைய இந்த நிலைமைக்கு காரணம்.
அவரை ஆரம்பத்திலிருந்தே நாம் காமெடியனாகவே பார்த்துவிட்டோம் இனி அவர் என்ன செய்தாலும் அதை மாற்ற முடியாது. காமெடியன் என்ற பிம்பத்திலிருந்து சந்தானத்தை மாற்ற முடியாது" என்று கூறியுள்ளார்.