அந்த கிரிக்கெட் வீரருடன் நான் டேட்டிங்-ஆ!! முற்றுப்புள்ளி வைத்த வாரிசு நடிகை சாரா..
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் சைஃப் அலிகான் தன் முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கும் பிறந்தவர் தான் நடிகை சாரா அலி கான்.
தற்போது டாப் நடிகையாக பாலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். பாலிவுட் நட்சத்திரங்கள் கிசுகிசுக்களுக்கும் டேட்டிங் செய்திகளுக்கும் சிக்குவது வழக்கம்.
அப்படி நடிகை சாரா அலிகான் பல பிரபலங்களுடன் டேட்டிங் காதல் விசயத்தில் சிக்கி வந்தார்.
சமீபத்தில் கரண் ஜோகர் ஷோவில் நடிகை அனன்யா பாண்டேவுடன் நடிகை சாரா அலிகான் கலந்து கொண்டு பல அந்தரங்க கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதில் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுடன் காதலில் இருக்கிறாரா சாரா என்று கரண் கேள்வி கேட்டார். அதற்கு சாரா, நீங்கள் எல்லோரும் தவறாக புரிந்து கொண்டீர்கள் சாரா நண்பர்களே என்றும் அவர் (கில்) எந்த சாராவுடன் டேட்டிங்கில் இருக்கிறாரோ என்று சாரா அலிகான் பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஏற்கனவே முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கருடன் டேட்டிங்கில் சுப்மன் கில் இருந்து வருவதாக பாலிவுட்டில் செய்திகள் கசிந்து வந்தது. அதேபோல் சாரா டெண்டுல்கரும் சுப்மன் கில்லின் ஆட்டத்தை பார்க்க உலக கோப்பை விளையாட்டுகளை பார்த்தும் வருவது குறிப்பிடத்தக்கது.