17 வயதான சியான் விக்ரமின் ரீல் மகளா இது! இப்படி ஆளே மாறிட்டாங்களே..

Vikram Ponniyin Selvan: I Indian Actress
By Edward Nov 27, 2022 10:39 AM GMT
Report

நடிகர் சியான் விக்ரம், அனுஷ்கா செட்டி, அமலா பால், சந்தானம், நாசர் உள்ளிட்ட பலர் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் நடித்து அசத்தியவர் சாரா அர்ஜுன். வட இந்திய குட்டி நட்சத்திரமாக சினிமா பற்றி தெரிந்த பெற்றோர்களால் தெய்வத்திருமகள் படத்தில் நடித்தார்.

இப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த நிலையில் அப்படத்தின் இயக்குனரின் ஏ எல் விஜய்யின் சைவம் படத்தில் லீட் ரோலில் நடிக்க வைத்தார். அதன்பின் இந்தி, மலையாளம் படங்களில் நடித்து வந்த சாரா அர்ஜுன் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினியாக நடித்துள்ளார்.

17 வயதான சியான் விக்ரமின் ரீல் மகளா இது! இப்படி ஆளே மாறிட்டாங்களே.. | Sara Arjun Latest Photos Video Post Viral

குட்டி குழந்தையாக இருந்த சாரா அர்ஜுன் தற்போது வளர்ந்து 17 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினியாக நடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்யின் சிறு வயது நந்தினியாக 17 வயதான சாரா அர்ஜுன் நடித்து அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார்.

இப்படத்தினை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திலும் சாரா வருவாரா என தெரியவில்லை. சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சாராவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.