20 வயதில் சென்சேஷனல் கதாநாயகியாக வலம் வரும் சாரா அர்ஜுன் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ
தமிழில் வெளிவந்த தெய்வத்திருமகள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். இதன்பின் சைவம், சில்லு கருப்பட்டி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

மேலும் கடந்த ஆண்டு இந்தியில் வெளியான துரந்தர் படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.
இந்த ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், துரந்தர் படத்தில் நடிப்பதற்காக நடிகை சாரா அர்ஜுன் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க அவர் ரூ. 1+ கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.