விஜய் உடன் ஒரு படத்தில் கூட நடிக்காத மீனா.. ஏன் தெரியுமா?
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பலரும் நினைப்பார்கள்.
தற்போது விஜய் அரசியலில் நுழைந்து விட்ட காரணத்தால் சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்துவிட்டார். அதனால் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா துறையினரும் அதிக வருத்தத்தில் இருக்கின்றனர்.

மீனா
நடிகை மீனா ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். அவர் பல முன்னணி ஹீரோக்கள் உடன் நடித்து இருந்தாலும் விஜய் ஜோடியாக உடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி இருக்கிறார்.
விஜய் பட வாய்ப்பு வரும் நேரங்களில் தான் மற்ற படங்களில் நடித்து கொண்டிருந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் தான் விஜய் உடன் நடிக்கும் பல பட வாய்ப்புகளை நிராகரிக்க நேர்ந்தது என மீனாவே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
