தற்கொலைக்கு பின் தலைக்காட்டாத பாக்யராஜின் மகள் சரண்யா!! இப்படியொரு விசயம் செய்கிறாரா!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வந்தவர் கே பாக்யராஜ். தற்போது இயக்கத்தை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் பாக்யராஜ் தன் மகள் சரண்யாவையும் சாந்தனுவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்திருந்தார்.
அதில் மகள் சரண்யா அறிமுகமாகி நடித்த சில படங்களிலேயே சினிமாவை விட்டுவிட்டு வெளிநாட்டில் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அங்கிருந்த கல்லூரி நண்பரை காதலித்து வந்த சரண்யா காதல் தோல்வியை சந்தித்து பல முறை தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார்.
அதிலிருந்து பாக்யராஜ் மீட்டெடுத்து மகளை காப்பாற்றியிருக்கிறார். இதனைதொடர்ந்து பல ஆண்டுகளாக குடும்பத்தினருடம் இருந்து வெளியில் தலைக்காட்டாமல் இருந்து வருகிறார் சரண்யா.
ஆனால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க தனியாக ஷாப்பிங் மற்றும் ரீடைல்ஸ் தொழிலை ஆரம்பித்து நடத்தியும் வருகிறார். இப்படியிருக்கும் சரண்யா தற்போது மீண்டும் சினிமாவில் காலெடி எடுத்து வைத்துள்ளார்.
அந்தவகையில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் 51வது படத்தில் சரண்யா ஸ்கிரீம்ப்ளே பணியை மேற்கொண்டு வருகிறேன் என்று இணையத்தில் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.
