வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

Vijay Actress
By Kathick Mar 11, 2026 02:30 AM GMT
Report

தனுஷ் - நயன்தாரா நடிப்பில் வெளிவந்த யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தவர் நடிகை சரண்யா மோகன்.

இதன்பின், விஜய்க்கு தங்கையாக வேலாயுதம் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதுமட்டுமின்றி பஞ்சாமிருதம், வெண்ணிலா கபடி குழு, ஈரம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சரண்யா மோகன் 2015ல் திருமணம் செய்துகொண்ட பின் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். குடும்பத்துடன் தான் முழு நேரத்தையும் சரண்யா செலவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், நடிகை சரண்யா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், இவருக்கே வயசே ஆகாதா என கேட்டு வருகிறார்கள். இதோ பாருங்க:

GalleryGallery