ரோட்டில் உருண்டு புறள வற்புறுத்திய இயக்குனர்! முகம் சுளித்து வடிவேலுவை மாட்டிவிட்ட நடிகை சரண்யா பொன்வண்ணன்

Indian Actress
By Edward 10 மாதங்கள் முன்
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் நாயகன் படத்தின் மூலம் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிகை சரண்யா பொன்வண்ணனை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் மணிரத்னம். இப்படத்திற்கு பிறகு தன்னுடைய திறமையை காட்டி முன்னுக்கு வந்த சரண்யா 2003ல் இருந்து துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

குறிப்பாக அம்மா கதாபாத்திரம் அவருக்கே பொருத்தமானதாக அமைந்து எல்லா நடிகர்களுக்கு பிடித்தமானவராக திகழ்ந்தார். நாம், தவமாய் தசமிருந்து, எம்-மகன், தென்மேற்கு பருவக்காறு, ஒருகல் ஒரு கண்ணாடி, ரெமோ, வேலையில்லா பட்டதாரி, கொடி போன்ற படங்களில் நடித்து மிரட்டி இருப்பார்.

பல விருதுகளை பெற்ற சரண்யா பொன்வண்ணன், எம்-மகன் படத்திற்காக தேசிய விருதினையும் வாங்கி இருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி பகிர்ந்துள்ளார். படத்தில் ஒரு காட்சியில் கோவிலுக்கு வெளியில் உருளுவது போன்ற சீன் அமைந்திருக்கும்.

அதை கூறிய திருமுருகனிடம், 100 பேர் பார்க்கும் இடத்தில் எனக்கு அவமானமாக நினைத்து என்னால் முடியாது என்று கூறினேன். ஆனால் திருமுருகன் என்னை வற்புறுத்தினார். ஒரு கட்டத்தில் வடிவேலு என்னிடம் வந்து நானே உருண்டு போறே என்று கூறிவிட்டார்.

ஆனால் திருமுருகன், நீங்கள் செய்தால் தான் நல்லா இருக்கும் என்று கூறி என்னை கெஞ்சினார். ஒரே டேக் தான் கொடுப்பேன், ரீடேக் எல்லாம் கேட்கக்கூடாது என தெரிவித்தேன். பின் உருண்ட போது பரத் என் சேலையை சரி செய்ய கேட்டு கொண்டேன்.

பல டேக்குகள் போனாலும் அந்த காட்சி சூப்பராக வந்தது. அந்த காட்சி மட்டும் இல்லை என்றால் என் வாழ்க்கையில் நான் மிஸ் பண்ணி இருப்பேன்.

அந்த ஒரே உருண்ட காட்சிக்காகவே நான் தேசிய விருது வாங்கினேன். மேலும் காமெடி ஜார்னரை நான் துவங்கிய முதல் படமாக எம் - மகன் இருந்தது என தெரிவித்துள்ளார் சரண்யா பொன்வண்ணன்.