15 வயதில் திருமணம் செய்து கொண்ட அம்மா நடிகை ரீஎண்ட்ரி!! சரண்யா பொன்வண்ணனுக்கு போட்டியா?
சினிமாவில் நடிகைகள் திருமணத்தை முடித்தாலே போது சினிமாவில் இருந்து விலகிவிடும் நிலைக்கு மாறிவிடுவார்கள். அப்படி தன்னுடைய 15 வயதில் வெங்கட சுப்பையா என்பவரை திருமணம் செய்து சினிமாவில் விலகியவர் தான் நடிகை சரிதா.
ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்த நடிகை சரிதா, அதன்பின் முகேஷ் என்ற நடிகரை திருமணம் செய்து 20 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து இரு ஆண் பிள்ளைகளை பெற்றார்.
அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்று மகன்களுடன் வெளிநாட்டில் செட்டிலாகினார்.
10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் அம்மா ரோலில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
பெரும்பாலும் அம்மா ரோலில் சிவகார்த்திகேயன் உட்பட பல நடிகர்களுக்கு நடிகை சரண்யா பொன்வண்ணன் தான் நடித்து கொடுப்பார்.
ஆனால் மாவீரன் படத்தில் சரிதாவின் நடிப்பால் ஈர்த்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது சரண்யா பொன்வண்ணனுக்கு போட்டியாக சரிதா கலமிரங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.