ரச்சிதா விட்டுட்டு போனா தினேஷ் இதைதான் செய்வான்!! பல உண்மைகளை உடைத்த சீரியல் நடிகர்..
சின்னத்திரை சீரியல்களில் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறியவர்கள் தினேஷ் - ரச்சிதா மகாலட்சுமி. 2015ல் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, கடந்த மூன்று ஆண்டுகளாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.
நடிகர் சரத் சந்திரா
ரச்சிதா பிக்பாஸ் 6ல் கலந்து கொண்டு பின் வீடு திரும்பியும் தினேஷை கண்டுகொள்ளாமல் இருந்தார். பின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் தினேஷ் மனைவி குறித்த விசயங்களை சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் தினேஷுடன் பூவே பூச்சூடவா சீரியல் நடித்த நடிகர் சரத் சந்திரா, இருவரும் பிரச்சனைகளை பற்றி பகிர்ந்துள்ளார். அதில் தினேஷ் என் நண்பர் என்று கூறுவதைவிட வீட்டில் இருவர் என்று அவனை நினைத்து வருகிறோம்.
என் குழந்தைக்கு மொட்டை போட தாய் மாமனாக இருந்து தினேஷ் மடியில் வைத்து தான் மொட்டை அடித்தோம். அப்போது தினேஷ், என் மனைவி கூட என்னை மதிக்காம விட்டுட்டு போயிட்டாங்க, ஆனா நீதான் எனக்கு தாய் மாமன் அந்தஸ்த்தை கொடுத்து இருக்க என்று கூறியதும் என் மனது கஷ்டமாகிவிட்டது.
தனிமையில் மூன்று வருடமாக கஷ்டப்பட்டு இருக்கிறார் தினேஷ் என்றும் ரச்சிதாவும் என் தங்கச்சி மாதிரிதான், ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனை அவர்கள் இருவரை தவிர 100 சதவீதம் யாருக்கும் தெரியாது என்றும் கூறியிருக்கிறார். மேலும், ரச்சிதா பிக்பாஸ் டைட்டிலை வாங்க வேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தான், ஆனால் அது நடக்காமல் போனதால் ரொம்பவும் கஷ்டப்பட்டான் எனவும் அதை சரிசெய்ய தானும் செல்வேன் என்று கூறினான்.
![விஜய், சங்கீதா பிரிவுக்கு நடிகை திரிஷா தான் காரணமா!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்..](https://cdn.ibcstack.com/article/e231a57f-57a6-4fac-9122-03fba2230a55/23-655c5df198ccc-sm.webp)
விஜய், சங்கீதா பிரிவுக்கு நடிகை திரிஷா தான் காரணமா!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்..
இன்னொரு கல்யாணம்
தினேஷுக்கு டைட்டில் கிடைத்தால் முதலில் ரச்சிதாவிடம் தான் செல்வான். ஆனால் ரச்சிதா மனநிலை என்ன என்று எனக்கு இப்போது தெரியவில்லை. ஒருவேளை ரச்சிதா, தினேஷை விட்டு பிரிந்தால், இன்னொரு கல்யாணம் என்ற வாழ்க்கை எண்ணம் சுத்தமாக கிடையாது. தினேஷ் அதே காதலில் தான் இருக்கிறான் என்றும் ரெண்டு பேருக்கும் பிரச்சனை சரியாகுமா என்று காலத்தின் கையில் தான் இருக்கிறது என்று சரத் சந்திரா தெரிவித்துள்ளார்.