மேடையில் மன்னிப்பு கேட்ட சரத்குமார்.. காரணம் இதுதானா
Sarathkumar
By Kathick
தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களின் ஒருவர் சரத்குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த போர் தொழில் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இப்படத்தின் வெற்றி விழாவில், படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் பத்திரிகையாளரை பார்த்து மேடையில் அமராதீர்கள், கீழே போய் அமருங்கள் என திமிராக கூறினார் என அந்த பத்திரிகையாளர் கோபத்துடன் போர் தொழில் படக்குழுவை கோபத்துடன் பேசினார். இதனால் படத்தின் இயக்குனரும் சற்றும் பதிலளிக்க முடியாமல் தடுமாறினார்.
இப்படியொரு நிலையில், உடனடியாக பேசிய சரத்குமார், 'அப்படி அவர் பேசியிருந்தால் அது மிகவும் தவறு, அவருக்காக பத்திரிகையாளர்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்' என பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார்.