உடல் தேவைக்காக திருமணம் செய்தால் அதான் நடக்கும்!! விவாகரத்தான சரத்குமார் முதல் மனைவி சாயா ஓப்பன்.
பிரபல நடிகர் சரத்குமார் பற்றிய அறிமுகம் தேவையில்லை, தமிழ் ரசிகர்களுக்கு இவர் பரிட்சியமானவரே. இவர் 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு பிறந்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார். சில தனிப்பட்ட காரணத்தால் சரத்குமார் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.
அதன் பின் சரத்குமார், பிரபல நடிகை ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சரத்குமாரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வரும் சாயா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் விவாகரத்து குறித்து சில விசயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில், திருமணம் செய்ய இதுதான் வயது என்று எதையும் நாம் குறிப்பிட்டு கூற முடியாது.
மனதளவில் திருமணம் செய்வதற்கு சரியான காரணம் இருக்க வேண்டும் என்றும் சிலர் தவறான காரணத்திற்கு திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் ஒரு நாள் கூத்து கிடையாது என்றும் கூறியுள்ளார்.
திருமணம் என்ற ஒரு பயணத்தில் நீங்கள் சரியாக பயணிக்க வேண்டும் என்றால் அனைத்து தளத்திலும் கொஞ்சம் உயர்ந்த நிலையை அடைந்திருக்க வேண்டும்.
சிலர் உடல் தேவைக்காக திருமணம் செய்து கொள்வதெல்லாம் உண்மையான திருமணம் கிடையாது என்றும் நீங்கள் தவறான காரணத்திற்காக திருமணம் செய்தால் அது பிரிவை சந்திக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றும் சரத்குமாரின் முதல் மனைவி சாயா தெரிவித்துள்ளார்.