பணத்திற்காக இப்படியா செய்வீங்க சரத்குமார்! 'வாரிசு' நடிகரை விளாசும் நெட்டிசன்கள்
நடிகர் சரத்குமார் ஒருகாலத்தில் டாப் ஹீரோவாக இருந்தவர். சுப்ரீம் ஸ்டார் என ஒரு பட்டமும் அவருக்கு உண்டு. ஆனால் தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
தற்போது விஜய் உடன் வாரிசு படத்தில் அவர் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக அவர் ஒரு மிகப்பெரிய தொகை சம்பளமாகவும் பெறுகிறார்.
இந்நிலையில் சரத்குமார் ஒரு சூதாட்ட தளத்தின் விளம்பரத்தில் நடித்து இருப்பதை பார்த்து மக்கள் அவரை விளாசி வருகிறார்கள். காசுக்காக இப்படி எல்லாம் நடிப்பீர்களா என கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்தால் பணத்தை இழந்து பலரும் தற்கொலை முடிவெடுக்கும் செய்திகள் அதிகம் சமீப காலமாக வந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகர் சரத்குமார் அதன் விளம்பரத்திலேயே நடித்திருப்பதற்கு கண்டனம் வலுத்து வருகிறது.
ரம்மி விளையாடுங்கள்
— Ganesh manoj (@ganesh8322) June 21, 2022
வாழ்க்கையை நாசமாகுங்கள்
இப்படிக்கு _ சரத்குமார் @realsarathkumar pic.twitter.com/F8YoYoyi1l
நடிகர்களே ரம்மி விளம்பரத்தில் நடிக்க மறுத்து வருகின்ற இந்த நேரத்தில், சரத்குமார் நடிகர் மட்டுமல்ல ஒரு கட்சியின் தலைவரும் கூட…
— Arun Raj (@Arunraj03) June 22, 2022
கொஞ்சாமவது சமுதாயத்தின் மீது அக்கரை இருந்தால் இதில் நடிச்சிருப்பாரா.?! @realsarathkumar என்ன சார் இது? pic.twitter.com/tmB21e8UMU
ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். ~ செய்தி
— தமிழன் சத்யா (@tamilansathya02) June 21, 2022
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் உயிரிழந்தவர்கள், நடுத்தெருவுக்கு வந்த சாமனிய மக்கள் ஏராளம்னு தெரியவில்லையா?!
ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய குரல் கொடுக்குற நேரத்துல இப்படி வழி தவறி போகலாமா நாட்டாம?! @realsarathkumar pic.twitter.com/SBnlyejUJe