சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் வின்னர் திவினேஷா இது!! இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?
Zee Tamil
Tamil Singers
Saregamapa Lil Champs
Divinesh
Saregamapa Seniors Season 5
By Jai
சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் திவினேஷ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. சமீபத்தில் நடந்து முடிந்த சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 4ன் டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு 10 லட்சம் மதிப்பிலான தொகை பரிசாக அளிக்கப்பட்டதுடன் மெல்லிசை இளவரசன் விருதையும் வழங்கினர்.

சரிகமப நிகழ்ச்சியின் போது தன்னுடைய தந்தைக்கு புது வண்டி வாங்கி வாங்க வேண்டும் என்று சொன்னதும் பாடகர் ஸ்ரீநிவாஸ், அந்த கனவை நிறைவேற்றினார்.
இதனையடுத்து பல கச்சேரிகளிலும் கலந்து கொண்டு பாடி வரும் திவினேஷ், வரும் ஜூலை மாதம் மலேசியாவிலுள்ள சிரம்பான் மாவட்டத்தில் பாடகர் ஸ்ரீநிவாஸ் நடத்தும் கச்சேரியில் கலந்து கொண்டு பாடவும் இருக்கிறார். திவினேஷின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.