தொலைந்துபோன அம்மா!! சரிகமப போட்டியாளரால் இணைந்த குடும்பம்..ஆச்சரியத்தில் நடுவர்கள்..

Zee Tamil Saregamapa Seniors Season 5
By Edward Aug 27, 2025 09:30 AM GMT
Report

சரிகமப சீனியர் சீசன் 5

மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சி பல விஷயங்களை செய்து வருகிறது. அதில் தற்போதைய சரிகமப சீனியர் சீசன் 5லும் தொடர்ந்து நடத்தி வருகிறது.

தொலைந்துபோன அம்மா!! சரிகமப போட்டியாளரால் இணைந்த குடும்பம்..ஆச்சரியத்தில் நடுவர்கள்.. | Saregamapa S5 Harish Family Missed Mother

போட்டியாளர்களின் குடும்ப சூழல் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு உதவி வரும் சரிகமப நிகழ்ச்சியின் போட்டியாளர் ஹரிஷ் மூலம் ஒரு ஆச்சரியப்படும் விதமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

தொலைந்துபோன அம்மா

ஹரிஷ் தன் அம்மாவிற்கான முருகன் கோவிலுக்கு சென்று வேண்டியப்பின், அங்கிருந்த ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கியுள்ளார்.

அதை ஒரு வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்ததை பார்த்த சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஒரு நபர் கால் செய்துள்ளார். அந்த வீடியோவில் உணவு வாங்கிய ஒருவர் தான் என் அம்மா என்று கூறியிருக்கிறார்.

தொலைந்துபோன அம்மா!! சரிகமப போட்டியாளரால் இணைந்த குடும்பம்..ஆச்சரியத்தில் நடுவர்கள்.. | Saregamapa S5 Harish Family Missed Mother

சில மாதங்களுக்கு முன் காணாமல் போய்விட்டதாக அவர் கூறியிருக்கிறார். உடனே ஹரிஷும் சரிகமப குழுவும் இணைந்து, அம்மாவை அவரின் மகன் மற்றும் கணவரிடன் சேர்த்து வைத்து பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.