TRP-க்காக இப்படியா!! சரிகமப சீனியர் 5 இலங்கை போட்டியாளர் சினேகாவின் மாடர்ன் லுக் புகைப்படம்..

Sri Lankan Tamils Sri Lanka Zee Tamil Saregamapa Seniors Season 5
By Edward May 31, 2025 09:30 AM GMT
Report

சரிகமப சீனியர் 5

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப.

TRP-க்காக இப்படியா!! சரிகமப சீனியர் 5 இலங்கை போட்டியாளர் சினேகாவின் மாடர்ன் லுக் புகைப்படம்.. | Saregamapa Senior 5 Srilankan Sneha Modern Photo

சமீபத்தில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 நிகழ்ச்சி நிறைவு பெற்றநிலையில், தற்போது சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. இதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்துள்ளது. அந்த எபிசோட்டில் பாடிய பல போட்டியாளர்கள் நடுவர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தனர்.

இலங்கை தமிழர்கள்

ஏற்கனவே 3 இலங்கை தமிழர்கள் சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது, இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் மலைவாழ் மக்களில் ஒருவரான சினேகா என்பவரும் கலந்து கொண்டிருக்கிறார்.

சினேகா

இந்நிலையில் போட்டியாளர் சினேகா இலங்கை தொலைக்காட்சியில் ஏற்கனவே போட்டியாளராக கலந்து கொண்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை தொலைக்காட்சியில் பாடும்ப்போது மிகவும் நேர்த்தியாக ஸ்டைலான ஆடையணிந்திருக்கிறார் சினேகா.

TRP-க்காக இப்படியா!! சரிகமப சீனியர் 5 இலங்கை போட்டியாளர் சினேகாவின் மாடர்ன் லுக் புகைப்படம்.. | Saregamapa Senior 5 Srilankan Sneha Modern Photo

ஆனால் அதே போட்டியாளர் சினேகா, சரிகமப சீனியர் நிகழ்ச்சியில் ஏழ்மையான கோலத்தில் தோற்றமளித்துள்ளார். இதனை பார்த்த இலங்கை வாழ் மக்கள் டிஆர்பிக்காக இப்படியெல்லாம் செய்யலாமா ஜீ தொலைக்காட்சி என்றும் இதனை அவர்கள் நிறுத்த வேண்டும் என்றும் மக்கள் கோபத்துடன் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Gallery